அருள்மொழிவர்மன் என்ற இயற்பெயர் கொண்ட ராஜராஜ  சோழன் , சோழ சாம்ராஜ்யத்தின் சரித்திரத்தில்  ஒப்பிட முடியாத அரசர்களில் ஒருவர்.

கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு பெரிய நிலப்பகுதியை தென்னகத்தில் இருந்து ஆண்ட மாமன்னர்  ஆவார். 

அந்த கற்பனைக் கதையை மிஞ்சும் அளவிற்கு ராஜேந்திர சோழனின் வாழ்க்கை இருந்தது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ரத்தமும் சதையுமாக  அவரது உடல் இவ்வுலகில் நடமாடியது.

 ஆயிரக்கணக்கான யானைகளையும் குதிரைகளையும் சுமார் ஒரு லட்சம் கால்களையும் கொண்ட யானையை கொண்ட படையின் மூலம் எதிரி நாடுகளை நடுங்க செய்தவர்.

 இராஜராஜசோழன் என்றதும் தமிழர்களுக்கு ஏனோ ஒரு பூரிப்பு. 

ஆனால் ராஜேந்திர சோழனை அறிந்தவர்கள் இதனை எளிதாக நடந்து கொள்வார்கள்.

 சோழ சாம்ராஜ்யத்தில் நூற்றுக்கணக்கான மைல்கள் கடல் கடந்து சென்று கீழை நாடுகள் அனைத்தையும் கைப்பற்றிய முதல் மாமன்னர் ராஜேந்திர சோழன்.

ராஜராஜ சோழன் பல்லவ மன்னர்கள் சிலருடனும்  மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுடன் கடல்  கடந்து சென்று போரில் வென்றுள்ளார்.

 ஆனால் ராஜேந்திரன் அளவுக்கு கிடையாது.

தன்னுடைய வாழ்க்கையில் தோல்வியை சந்திக்காத ஒரு மன்னன் உண்டா என்பவர்களுக்கு ராஜேந்திரனை காட்டித் தான் வரலாறு புகட்ட வேண்டும்.

 ஆகையால் தான் ராஜேந்திரனின் புகழை பெருமைப்படுத்தும் வகையில் அவர் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழாவின் ராஜேந்திர சோழனுக்கு அஞ்சல் தலை வெளியிட்டது மத்திய அரசு.

கப்பல் கட்டுமான நிறுவனத்திற்கு ராஜேந்திர சோழனின் உருவ படமும் அர்ப்பணிக்கப்பட்டது.

 அப்படிப்பட்ட இந்தியத் துணைக்கண்டத்தின் பேரரசன் ராஜேந்திரன் வரலாறு ராஜராஜ சோழன் என்னும் பெயரின் பின்னால் மறைந்து போனது என்பது எவருக்கும் புரியாத புதிராகவே உள்ளது.

 

 இந்தியா என்ற நாடு உருவாவதற்கு கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்  தஞ்சை பெரிய கோயில் கட்டி தமிழரின் கட்டிட கலையை உலகிற்கு பறைசாற்றிய ராஜராஜ சோழனுக்கும் திரிபுவன மாதேவிக்கும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர் ராஜேந்திர சோழன்.

 ராஜராஜனுக்கு பல மனைவிகள் இருந்தாலும் திரிபுவன மாதேவி நெருக்கமானவர்.

 குழந்தை பிறந்த மகிழ்ச்சி செய்தி அரண்மனையில் பரவியது.

 பிராமணர்களின் ஆலோசனையின்படி நாள் நட்சத்திரம் பார்த்து பெயர் சூட்டு விழாவும் நடைபெற்றது.

 அப்படி ராஜேந்திரன் குழந்தையாக இருந்தபோது பெற்றோர் வைத்த பெயர் மதுராந்தக சோழன்.

ஆனால் அவருக்கு காலம் வைத்த பெயர்தான் கடாரம் கொண்டான். 

ராஜேந்திரன் பெற்றோர் வளர்த்ததை விட அவரை ராஜராஜனின் தமக்கையான குந்தவை தான் வளர்த்தார்.

ராஜேந்திரனுக்கு அரச சபையில் நடக்கும் நீதி பரிமாணங்களைப் பார்க்க சிறுவயதிலிருந்தே ஆர்வத்தை ஏற்படுத்தும் குந்தவை தான்.

இவரின் புத்திக் கூர்மையை பார்த்த ராஜராஜ சோழன் ராஜேந்திர கத்திப் பிடிக்கவும் எதிரிகளை வெட்டி வீழ்த்தவும் போர்ப் பயிற்சி அளித்தார்.

  பல பராக்கிரமசாலி என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்து விட்ட ராஜேந்திரனின் புத்திசாலித்தனத்தை பார்த்து வியந்த ராஜராஜன் ,தனது ஆட்சிக் காலத்திலேயே 1012 ஆம் ஆண்டு ராஜேந்திர சோழனை இணை அரசனாக நியமித்து ஆட்சி அதிகாரத்தையும் வழங்கினார்.

 அதை தொடர்ந்து அடுத்த இரண்டு ஆண்டுகளில் பட்டத்து அரசனாக அரியணையில் ஏறினார் ராஜேந்திர சோழன்.

 ஒரு அரசன் ஆட்சியில் இருக்கும் போது அதே அதிகாரத்துடன் வேறு யாரும் பதவியில் இருக்க முடியாது.

 அந்த அரசனின் காலம் முடிந்த பிறகு தான் வேறு எவரும் அரசனாக அரியணையில் அமர்த்த படுவது வழக்கம்.

 ஆனால் ராஜேந்திர சோழன் அவரது தந்தை இராஜராஜசோழன் அரசனாக இருக்கும் போதே  இனை அரசனாக பொறுப்பேற்று அவரது ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற வேங்கி மற்றும் கலிங்கப் போர்களில் சோழநாட்டிற்கு வெற்றியை தேடி தந்தார்.

 இராஜேந்திரன் இளவரசனாக இருந்த பொழுதே சோழர் படைகளுக்கு தலைமை வகித்து மேற்குப் பகுதிகளில் போர்களை நடத்தியவர்.

 ராஜேந்திர சோழனுக்கு பஞ்சவன் மாராயன் என்ற பட்டமும் கொடுக்கப்பட்டது.

ராஜேந்திரன் கொங்கணம் துளுவம் முதலான நாடுகளை கைப்பற்றியதோடு சேரனை அவனுடைய மலை நாட்டை விட்டு விரட்டி அடித்தார்.

மன்னர்கள் போருக்குச் செல்லும் நாடுகளில் கவர்ந்து வரும் பெண்களை தங்களது விருப்பத்திற்கு பயன்படுத்தி வந்த காலம் அது. 

 ஆகையால் அந்தப்புரங்களில் எப்போதும் பெண்கள் கூட்டம் அலை மோதிக் கொண்டிருக்கும்.

இதில் எந்த மன்னனும் விதிவிலக்கல்ல.

 அப்படி ராஜராஜ சோழனை போலவே ராஜேந்திரனுக்கும் பல மனைவியர்கள் இருந்தனர். 

தனது ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே தன்னுடைய மகனான இராஜாதிராஜ சோழனை இளவரசனாக பட்டம் சூட்டி ஆட்சிப் பொறுப்புக்களை ஒப்படைத்தார்.

ராஜேந்திர சோழன் தனக்குப் பிறகு யார் முடிசூட்டப்பட வேண்டும் என்பதில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கவே நடைமுறைப்படுத்தப் பட்டிருக்க வேண்டும்.

ஏறக்குறைய 26 ஆண்டுகளுக்கு இருவருமாய் சோழப் பேரரசை ஒரு சாம்ராஜ்யமாக கட்டமைத்தனர்.

 அந்தக் காலகட்டம்தான் சோழ சாம்ராஜ்யத்தில் தவிர்க்க முடியாத காலகட்டமாக அமைந்தது.

 ராஜேந்திரனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்த போது  சில நாடுகளை உள்ளடக்கிய பகுதிதான் அன்றைய சோழ சாம்ராஜ்யத்தின் எல்லைகளாக ஒப்படைத்திருந்தார் ராஜராஜன். 

 ராஜேந்திர சோழன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் அதன் எல்லைகளை விரிவடையச் செய்ய வேண்டும் என்கிற சிந்தனை இயல்பாகவே வந்து விட்டது.

 ராஜேந்திரனுக்கு அதற்கான வேலைகளை செய்துகொண்டே பயிற்சியளிக்கப்பட்ட வீரர்களைக் கொண்ட படை ஒன்று நாட்டின் எல்லையை காப்பதற்கு தயார்படுத்தினார்.

 தன்னுடன் ஒரு சிறந்த கடற்படையையும் வைத்திருந்தான் ராஜேந்திர சோழன்

 இந்த கடற்படையின் உதவியுடன் கிழக்கிந்தியத் தீவுகளுடனும் உள்ளிட்ட நாடுகளுடன் போர் நடைபெற்று வந்தது.

தலைசிறந்த ஒன்றாகம சோழ சாம்ராஜ்யத்தை மாற்றி அமைத்தார் ராஜேந்திரன்.


ராஜராஜ சோழன் காலத்துக்குப் பிறகு மிகப் பெரிய படை திரட்டி வந்து இலங்கை வரை போய் வெற்றிக்கொடி நாட்டிய உரை தமிழ் மன்னன் ராஜேந்திர சோழன் மட்டுமே.

 கடலின் தன்மையை அறிந்து, காற்றின் தன்மை தெரிந்து ,இரவு பகல் பாராமல் ஆமைகள் போகிற நீரோட்டப் பாதை தெரிந்து நூற்றுக்கணக்கான வங்கக் கடலின் கீழே உள்ள நாடுகளை போரிட்டு வென்றான் ராஜேந்திரன்.

 இதன் காரணமாக சோழ நாட்டின் எல்லை வடக்கே கங்கை கரை கடந்து பர்மா ,அந்தமான் நிக்கோபார் ,லட்சத்தீவுகள்! மாலத்தீவுகள் என பரவியிருந்தது.

 கிழக்கே பெரிய அரசுகளாக சுமத்ரா, ஜாவா, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் புலிக்கொடியை பறக்கவிட்டு புளகாங்கிதம் அடைந்தார் ராஜேந்திரன்.

 இராஜேந்திரனின் இலங்கை  போர் சுவாரஸ்யமானது.

ராஜராஜசோழன் தொடங்கி வைத்த இந்த படையெடுப்பை நிறைவு செய்தார் ராஜேந்திரன்.

 பாண்டிய மன்னர்களால் இலங்கை  அரசர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டதாக சொல்லப்படும் ரத்தினக் கற்கள் பதித்த  வாளையும் முத்து மாலையையும் கண்டறியும் விதமாக  இப்போர் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

 போரில் பெரும் வெற்றி பெற்றார் இராஜேந்திரன்.

 தொடர்ந்து பாண்டியர்களுக்கும் சேரர்களுக்கு எதிரான படையெடுப்பு மேற்கொண்ட ராஜேந்திரன் பாண்டியர் துறைமுகங்கள் அனைத்தையும் கைப்பற்றியிருக்கிறார்.

பாண்டிய மன்னனின் ஒளிபொருந்திய மாசில்லாத முத்துக்களை கவர்ந்தார்..

 தன்னுடைய மகன்களின் ஒருவனை பாண்டிய மன்னனாக முடிசூட்டி மதுரையில் இருந்து ஆட்சி செய்ய படித்ததையும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

 சோழர்கள் நடு நாடு தொண்டை நாடு ஆகிய நாடுகளோடு நட்புடன் இருந்தன .

அதாவது அந்த மக்களோடு தமிழர்கள் மிக நெருக்கமாக தான் வாழ்ந்து இருக்கின்றன.

ராஜேந்திரன்  ஒட்ட தேசம் தொடர்ந்து தொந்தரவு செய்ததால் அவருக்கு எதிராக போர் தொடுக்க வேண்டியதாகிவிட்டது.

 ராஜேந்திரனுக்கு இப்படி நாலா புறமும் கிடைத்த வெற்றிகள் இராஜேந்திரனை கங்கை நோக்கிய படையெடுக்க வைத்துவிட்டது.

ராஜேந்திரனின் ஆயுதப் படைகள் வங்கதேசத்தின்  மன்னனான மகிபாலனைத்  பெரும் வெற்றி பெற்றது.

 ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள்  இப்போர் நீடித்தது.

இந்தியாவின் பெரும்பாலான அரசுகள் சொழ பெரும்படைக்கு முன் தோல்வியுற்றன.

ரனசுராவின் படைகளை வென்று தர்மபாலாவின் நாட்டிற்குள் நுழைந்தது சோழர் படை. 

 கங்கை நதியை வென்று சோழநாட்டுக்கு கொண்டுவந்ததாக திருவாலங்காட்டுச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.

 அக்காலத்தில் மதுரா மிகப் பெரிய நாடு.

அதன் செல்வ வளத்தைக் கொள்ளையடிக்க கஜினி முகம்மது பல முறை படையெடுத்து கொள்ளையடித்தார்.

மதுராவை ராஜேந்திர சோழனும் வென்று கைப்பற்றினார்.

 ஒடிசா உள்ளிட்ட அண்டை நாடுகள் ராஜேந்திரன் வீரத்தின் முன் மண்டியிட்டது .

வரலாற்று ஆய்வாளர்கள் காவிரிக் கரையை நோக்கி கண்ணுக்குத் தென்படும் நாடுகளை வென்றுக் கொண்டே முன்னேறுகிறான் முகமது கஜினி.

அதே நேரத்தில் காவிரியின் தென்கரையில் போரிட்டுக் கொண்டிருக்கிறது சோழர் படை.

ஒருவேளை முகமது கஜினியும் ராஜேந்திர சோழனும் சந்தித்திருந்தால் இந்தியாவின் வரலாறு வேறு விதமாக எழுதப்பட்டிருக்கும் . 

தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த சாளுக்கிய மன்னர்களால் தலைநகரை தஞ்சையில் இருந்து கிழக்கே ஜெயங்கொண்டம் அருகே தீர்மானிக்கிறான் .

கங்கை கொண்ட சோழபுரம் என பெயர் சூட்டப்பட்ட நகரத்தில் பிரமாண்டமான மதில்களை கொண்ட அரண்மனை அமைக்கப்பட்டது 

சுற்றிலும் காவலர்கள் அமைச்சர்கள் பிராமணர்கள் தங்குவதற்க்கென்று தனித்தனி இருப்பிடங்கள் வகைப்படுத்தப்பட்டு அமைக்கப்பட்டது.

எதிரிகள் அத்தனை சீக்கிரம் ஊடுருவி விடாத அளவுக்கு பலத்த பாதுகாப்புடன் கூடிய கோட்டைச்சுவர்.

 அத்துடன் தனது தந்தை தஞ்சையில் கட்டியது போன்று கோயிலையும் கட்டினார்.

 தஞ்சைக் கோயிலை கட்டிய பெருந்தச்சன் மாணவர்கள் இந்த கோயிலை கட்டி எழுப்பினர்.

தஞ்சை பெரிய கோயில் அமைப்பில் இக்கோயில் கட்டப்பட்டலும்  ,பல வகையிலும் மாறுபட்டதாக இருந்தது.

 தஞ்சை பெரிய கோயில் விமானம் நான்கு பக்கங்களைக் கொண்டது.

ஆனால் இக்கோவிலின் விமானம் ஏட்டு பக்கங்களோடு  அமைக்கப்பட்டது.

கிழக்கு நுழைவு வாயிலில் எதிரில் பெரிய நந்தி பகவான் பிரமாண்டமான மூல மூர்த்திகள் , கல்லில் தாமரைப்பூ வடிவில் பார் சாஸ்திர முறைப்படி அழகாக செதுக்கப்பட்ட நவகிரகங்கள் ,60 அடி சுற்றளவில் 13.5 அடி உயரத்தில் ஒரே கல்லில் வடிக்கப்பட்ட லிங்கம் என அனைத்தும் பிரமாண்டத்தை வெளிப்படுத்தின.

 இங்குள்ள லிங்கம்தான் தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம்.

கோடைகாலத்தில் குளிர்ச்சியையும் குளிர்காலத்தில் வெப்பத்தையும் தரும் வகையில் லிங்கத்தின் அடியில் சந்திரகாந்த கல் வைக்கப்பட்டு உள்ளது. 

நந்தி மூலவருக்கு நேர் எதிரே ,200 மீட்டர் தொலைவில் சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டுள்ளதால், சூரிய உதயத்திலிருந்து மறையும் வரை இந்திய நெற்றியில் பட்டு பிரதிபலிக்கும் சூரிய ஒளிக் கீற்று கருவறையில் இருக்கும் லிங்கத்தின் மீது விழும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

 160 அடி உயரம் கொண்ட கோபுரத்தின் மீது உள்ள கலசத்தின் நிழல் தஞ்சைக் கோயிலைப் போலவே பூமியில் விழாது என கோயிலுக்கு வரும் மக்கள் நம்பினர்.

 கும்பாபிஷேகம் செய்யும் புனித நீரை கோயிலுக்குள்ளேயே கிணறு வெட்டி அந்த புனித நீர் அங்கு வந்து சேரும்படி நேர்த்தியாக ஏற்பாடு செய்தார்கள்.

 குறித்துக் கொடுத்தபடி ஒன்றும் குறைவில்லாமல் சிறப்பாகவே இக்கோவில் செய்து முடிக்கப் பட்டது.

 பல்வேறு சிறப்புகளைக் கொண்ட கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

 இக்கோவிலினை உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்து பராமரித்து வருகிறது UNESCO.  

  தற்போதைய ஆந்திராவில் உள்ள காளஹஸ்தி உள்ளிட்ட பல்வேறு கோயில்கள் ராஜேந்திரன் கட்டப் பட்டவை என்பது தமிழரின் பெருமைக்குச் சான்றாகும்.

 கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் கோயிலை கட்டியதும் ராஜேந்திரன் வம்சாவளி மன்னனான  சூடிய சூரியவர்மன்.

 சோழர்களின் பலத்தை வட இந்திய மன்னர்களிடம் காட்டி கதிகலங்கச் செய்த ராஜேந்திரனுக்கு பிற நாடுகளையும் தனது காலடியில் வைத்துக்கொள்ள வேண்டும் என ஆர்வம் துளிர்விடுகிறது.

 ஏற்கனவே தொடங்கி வைத்த ஈழப் போரை வெற்றிகரமாக முடித்தார்.

 பகலில் சூரிய வெளிச்சத்திலும் இரவில் நிலவொளியில் தொடர்கிறது பயணம்.

 கடல் கடந்து கடாரம் எனும் பகுதியை கைப்பற்றுகிறார் ராஜேந்திரன். 

தாய்லாந்து ,கம்போடியா, வியட்நாம் ,லாவோஸ் என விரிந்து சென்றது சோழ நாடு. 

 சோழர் படை கடாரம் படையெடுப்பிற்குப் பின் இராஜேந்திரன் இருபது ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறார்.

அந்த காலத்தில் போது எதுவும் நடைபெறவில்லை என வரலாற்று ஆய்வாளர்கள் கூறினாலும் கல்வெட்டுகள் இதனை மறுக்கின்றன.

 தன்னுடைய ஆரம்ப காலத்தில் நேரடியாகப் போரில் பங்கேற்ற ராஜேந்திரன் தனது மகளையே போருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.


 தன் மத்திம வயதில் திருவாரூரைச் சேர்ந்த பரவை என்கிற ராஜேந்திரன்  சந்தித்திருக்கின்றார்.

பரவையின் அறிவிலும் அழகிலும் மயங்கினார் ராஜேந்திர சோழன். 

 அவள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் செங்கற்களால் அமைந்த திருவாரூர் கோயிலைக் கருங்கல்லால் உருவாக்கி அதன் மீது தங்கத்தகடு வந்ததாகவும் கூறப்படுகிறது.


 சிதம்பரம் அருகேயுள்ள பிச்சாவரம் பகுதி, ராஜேந்திர சோழன் காலத்தில் துறைமுகங்களாக இருந்திருக்கலாம் எனவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

 இவ்வளவு செல்வாக்கோடு வாழ்ந்த ராஜேந்திர சோழன் காஞ்சிபுரம் அருகே பிரம்மதேசம் என்ற ஊரில் தன்னுடைய 84 ஆம் வயதில் இறந்து போனார்.

அவருடைய இழப்பை அடுத்து அவருடைய மனைவியர்களில் ஒருவரான வீரமாதேவி உடன்கட்டை ஏறிய தாகக் கூறப்படுகிறது.

 கடாரம் கொண்டான் என்றும் கங்கைகொண்டான் என்று வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட ராஜேந்திர சோழனின் ஆட்சியை தொடர்ந்து வந்த சோழ சாம்ராஜ்யம் ,அடுத்த 200 ஆண்டுகளில் சிதைந்து போனது.

  ராஜராஜ சோழன் போன்ற சமயத்தையும் மொழியையும் திணிக்க  ராஜேந்திரன் விரும்பவில்லை .

 

 ராஜேந்திரன் ஆயிரம் ஆண்டு விழாவை முன்னிட்டு மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மத்திய அரசின் கப்பல் கட்டுமான நிறுவனமான பாக்ஸ்கான் டாக்சி நிறுவனத்துக்கு ராஜேந்திர சோழனின் உருவப்படம் அர்ப்பணிக்கப்பட்டது.

 ராஜேந்திர சோழன் இந்திய கடற்பகுதியில் வலிமையான கப்பல் படையை அமைத்து ஆட்சி செய்தவர் ராஜேந்திரன் என்று மத்திய அரசு தெரிவித்தது .


Post a Comment

Previous Post Next Post