சங்க காலத்தில் தமிழில் கோலோன்றி வந்த சோழர்களின் ஆதிக்கம் கிமு 3 நூற்றாண்டில் களப்பிரர்களின் வருகைக்குப் பிறகு வீழ்ச்சியை சந்திக்க நேரிட்டது.

அதன் பிறகு 3 நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஆட்சி இல்லாமல் இருந்த சோழர்களின் வரலாற்றை விஜயாலய சோழன் கிபி 7 நூற்றாண்டில் மீண்டும் மீட்டெடுத்தார்.

அவரைத் தொடர்ந்து ஆதித்த சோழன்முதலாம் பராந்தகன், கண்டராதித்தன் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தனர்.

கண்டராதித்தரின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் உத்தமசோழன் மன்னராக பதவியேற்று இருக்க வேண்டும்.

ஆனால் உத்தம சோழன் அப்போது சிறுவனாக இருந்ததால் ,சகோதரர் மகனான சுந்தர சோழர் மன்னன் சோழ சாம்ராஜ்யத்தின் புதிய மன்னராக பொறுப்பேற்றர்.

சுந்தர சோழருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.

  1. ஒருவர் ஆதித்த கரிகாலன்.
  2. மற்றொருவர் அருண்மொழி வர்மன் என்ற இயற்பெயர் கொண்டவர் ஆன ராஜராஜ சோழன்.

ராஜராஜ சோழன்எந்த ஆண்டு பிறந்தார் என்ற தகவல் இல்லை.

ஐப்பசி மாதம் சதய நாளில் ராஜராஜன் பிறந்தார் என்ற தகவல் மட்டும் கிடைத்துள்ளது.

ராஜராஜ சோழனுக்கு பத்துக்கும் மேற்பட்ட மனைவிகள் இருந்ததாக குறிப்புகள் தெரிவிக்கின்றன.

 ராஜராஜ சோழனுக்கு  2மகள்களும் ராஜேந்திர சோழன் என்ற மகனும் இருந்தனர்.

தனது சகோதரி குந்தவை மீதான அன்பின் வெளிப்பாடாக ஒரு மகளுக்கு குந்தவை எனவும் தனது பாட்டி செம்பியன் மாதேவியின் நினைவாக மற்றொரு மகளுக்கு மாதேவடிகள் எனவும் பெயர் சூட்டினார் ராஜராஜன்.

ராஜராஜனின் தந்தையான சுந்தரசோழர் மன்னராக பொறுப்பேற்றவுடன் தனது மூத்த மகன் ஆதித்த கரிகாலனுக்கு இளவரசனாக பட்டம் சூட்டி வைத்தார்.

தனக்கு பிறகு ஆதித்த கரிகாலனை மன்னனாக முடிசூட்டி வைக்கலாம் எனவும் கனவு கண்டார்.

சுந்தர சோழரின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் மர்ம நபர்களால் திடீரென ஒருநாள் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி சோழ நாட்டு மக்களையும் சுந்தர சோழனையும் ராஜராஜ சோழனையும் மீளா துயரத்தில் ஆழ்த்தியது .

ராஜராஜசோழன் அந்த சோகத்தில் இருந்து மீட்டு வந்தாலும் சுந்தர சோழரை புத்திர சோகம் வாட்டியது. 

அதன் விளைவாக அவர் காலமார்.

சோழ ராஜ்ஜியத்தின் யார் தலைமை ஏற்று நடத்தப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது.

முறைப்படி சுந்தர சோழனுக்குப் பிறகு அவரது இரண்டாவது மகனான ராஜராஜ சோழன் பதவியேற்க்கும் சூழல் ஏற்பட்டது.

ஆனால்  சுந்தர சோழருக்கு அடுத்த மன்னராக பதவியேற்று உரிமை கோரினார் மதுராந்தக உத்தம சோழன்.

உத்தம சோழன்  சிறுவனாக இருந்ததால்தான் அவருக்கு பதிலாக சுந்தரசோழர் பதவி ஏற்றிருந்தார்.

ஆகவே அவரது மறைவிற்குப் பிறகு தன்னை மன்னராக்கும்படி உத்தம சோழன் உரிமை கோரினார்.

அவரது தரப்பு நியாயத்தை புரிந்து கொண்ட ராஜ ராஜ சோழன் தனக்கு பதிலாக உத்தமசோழன் புதிய மன்னராக பதவியேற்ற  சம்மதிதார்.

உத்தமசோழன் விரும்பும் வரை அவர் மன்னராக பதவி வகிக்க  சம்மதிப்பதாக கூறினார்.

அதன்படி உத்தம சோழரும் மன்னராக பொறுப்பேற்ற சில காலம் சென்ற நிலையில் திரைக்கதையில் மீண்டும் ஒரு திருப்பம் ஏற்பட்டது.

இராஜராஜ சோழரின் சகோதரரான ஆதித்த கரிகாலனைக் கொலை செய்தவர்கள் யார் என்பதை  உத்தம சோழர் கண்டு பிடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் அப்போது தான் தெரிந்தது ஆதித்த கரிகாலனை  மர்ம நபர்களால் வைத்துக் கொலை செய்வதே உத்தம சோழர் தான் என்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உத்தம சோழர்க்கு பதிலாக ராஜராஜ சோழனை மன்னராக பதவி ஏற்க வேண்டும் என பொதுமக்கள் திரும்விர்.

ஆனால் அதற்கு 12 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.

985 ஆம் ஆண்டு உத்தமசோழன் காலமானதை அடுத்து மக்களின் ஏகோபித்த ஆதரவோடு சோழ ராஜ்ஜியத்தின் மன்னராக முடி சூட்டிக்கொண்டார் ராஜராஜ சோழன்.

ராஜராஜ சோழனின் இயற்பெயர் அருள்மொழி வர்மன்.

மன்னராக பதவியேற்ற போது தான் ராஜராஜன் என்ற பெயர் அவருக்கு சூட்டப்பட்டது.

ராஜராஜசோழன் பதவியேற்றவுடன் முதல் வேலையாக தனது சகோதரர் ஆதித்த கரிகாலனைக் கொலை செய்தவர்களை தண்டிக்க முடிவெடுத்தார்.

அதன்படி சோமன், சாம்பவன் என்ற குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப் பட்டார்கள்.

அவர்களின் சொத்துக்களும் முடக்கப்பட்டன.

அடுத்ததாக தனது வருங்காலத் திட்டங்களை வகுக்கத் தொடங்கிய மன்னர் ராஜராஜன் , ராஜ்ஜியத்தை நிலைநிறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தார்.

 தொடக்கத்தில்  சோழ ராஜ்ஜியம் விரிவடைந்த சாம்ராஜ்யமாக இருக்கவில்லை.

இன்றைய தஞ்சாவூர்,திருச்சி மட்டுமே சோழ நாடாக இருந்தன. 

அதன் பின்னர் தொண்டை நாடு ,கொங்கு நாடு, இலங்கை சில பகுதிகளும் சோழ சாம்ராஜ்யத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன.

அந்த பரந்த நிலப்பரப்பை ஆளும் பொறுப்பை தான் மன்னர் ராஜராஜன் கொண்டிருந்தார்.

தமிழக மன்னர்களில் நிரந்தரமாக ராணுவம் வைத்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை உணர்ந்தவராக ராஜராஜ சோழன் குறிப்பிடப்படுகின்றார்.

மற்ற அரசர்கள் போர் சமயங்களில் மட்டுமே ராணுவத்தை திரட்டும் பணியை ஈடுபட்டிருக்க, எப்போதும் இருக்கும்படியான நிரந்தர ராணுவத்தை நிறுவினார் ராஜராஜன்.

அது மட்டுமல்லாது அனைத்து படைகளுக்கும் அவரே தலைவராக பொறுப்பேற்றார்.

ராஜராஜ சோழனின் தொடக்ககால வெற்றிகளில் மிக முக்கியமானதாக குறிப்பிடப்படுவது காந்தளூர் சாலைப் போர்.

 தூதுவன் ஒருவனின் கைது நடவடிக்கை, இப்போருக்கு  காரணமாக அமைந்தது 

செய்திகளுடன் தூதுவன் ஒருவனை சேரர்களிடம் தூது அனுப்பி வைத்தார்.

அவன் வந்த வேகத்திலேயே கைது செய்து சிறைக்கு அனுப்பி வைத்தான் சேர மன்னன்.

 இது இராஜராஜ சோழனை ஆத்திரமூட்டச் செய்தது.

விளைவு போர் .

style="background-color: #fdffff; font-family: "Droid Serif", serif; font-size: 14px;">இப்போருக்கு ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழன் படையை வழி நடத்தினார்.

இந்த போர் மட்டுமல்லது, ராஜராஜ சோழனின் காலத்தில் நடைபெற்ற பெரும்பாலான போர்களில் சோழப் படையை ராஜேந்திர சோழனினே வழி நடத்தினார்.

உடுமலையில் இருந்து சேரர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.

 தனது வெற்றிக்கு பிறகு அந்த  நாட்டிலுள்ள திருநந்திக்கரை இடத்தில் ஒரு தன்னுடைய பிறந்த நாள் விழா எடுக்க ராஜராஜன் ஆணையிட்டார் 

அதாவது சோழ மன்னனான தனது பிறந்த நாளை வேறு நாட்டில் ஆண்டுதோறும் கொண்டாடிட ஆணையிட்டார்

களப்பிரர்களின் நிலமான கர்நாடகாவின் மீதும் இலங்கையின் மீதும் ராஜன் எனக்கு எப்போதும் ஒரு கண் இருந்து வந்தது.

போர் புரிவதற்கான தக்க சமயத்தை எதிர்நோக்கி காத்திருக்கத் தொடங்கினான்.

அடிப்படையில் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய சோழர்கள் நமக்கு கொடுத்த கொடைகளில் முக்கியமானவை ஏரிகளை சொல்லலாம்

 தமிழகத்தின் மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி உள்ளிட்ட பல ஏரிகள் சோழர்கக்ளின்  ஆட்சியில்தான் வெட்டப்பட்டன.

வீராணம் ஏரியை முதலாம் பராந்தக சோழன் கட்டினார்.

தமிழர்களின் கட்டுமான சாதனையாக விளங்கும் கல்லணையைக் கட்டிய கரிகாலனும் ஒரு சோழ மன்னன்தான்.

இராஜராஜனின் காலத்தில் சிறியதும் பெரியதுமாக நூற்றுக்கணக்கான ஏரிகள் வெட்டப்பட்டன.

தனது முன்னோர்களை முன்மாதிரியாகக் கொண்டு நீர் மேலாண்மையில்  பல திட்டங்களை கொண்டு வந்தார்.

ராஜராஜேஸ்வரி உடையார் பெரும் பண்டாரம் என்ற மக்கள் வங்கி ஒன்றை உருவாக்கினார் ராஜராஜன்.

பணம் தேவைப்படும் மக்களுக்கு இந்த வங்கியில் இருந்து கடன் வழங்கப்பட்டது.

வாங்கிய கடனுக்கு மக்கள் 12 சதவீத வட்டியை செலுத்தியதால் அரசு கஜானாவும் நிறைந்தது. 

இவ்வாறு ஒருபுறம் ஆட்சி நிர்வாகத்தை கவனத்தைச் செலுத்திய ராஜராஜன் மறுபுறம் தொடர்ந்து போர்களில் ஈடுபட்டு வந்தார்.

 தமிழ் நாட்டை முற்றிலும் கைப்பற்றிய அவர் ,அதனை தொடர்ந்து ஆந்திர கர்நாடக பகுதிகளைக் கைப்பற்றினார்.

 ராஜராஜன் இலங்கையை வெற்றி கொண்டது  வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.

 எந்த தமிழ் மன்னனும் இலங்கைத் தீவு முழுவதையும் தனது ஆட்சியின்கீழ் கொண்டு வந்ததாக வரலாறு இல்லை.

ஆனால் ராஜராஜசோழன் வந்த வரலாற்றை மாற்றி எழுதினார்.

 கடல் வணிகத்தை மேம்படுத்த உள்ளிட்ட காரணங்களுக்காக இலங்கையை கைப்பற்ற  தொடங்கினார் ராஜராஜன்.

 அந்த சமயத்தில் ஐந்தாம் மகிந்தன் என்ற மன்னன் இலங்கையை ஆட்சி செய்து வந்தான்.

அவனது ஆட்சியில் திடீரென ராணுவப் புரட்சி ஏற்படவே அவரது ஆட்சி ஆட்டம் கண்டது.

 இத்தகையதொரு நேரத்தில்தான் இராஜராஜனும் அவன் மகன் ராஜேந்திரனும் காத்திருந்தனர்.

உடனே சற்றும் தாமதிக்காமல் தனது கடற்படையை முடிக்கவிட்டார் ராஜராஜ சோழன் .

சோழக் கடற்படை இலங்கையை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.

 அதையும் ராஜேந்திர சோழன் தான் முன்னின்று வழி நடத்தினார்.

 நீராவிக் கப்பல்கள் உருவாக்கப்பட்ட அந்த காலகட்டத்தில் பெரும்பாலான கப்பல்களை பயணித்து இலங்கை மீது போர் தொடுத்தது இன்றளவும் சாதனையாக பார்க்கப்படுகிறது.


சில நாள் பயணத்திற்குப் பிறகு சோழ நாட்டுக் கப்பல்கள் இலங்கை துறைமுகத்தை வந்தடைந்தன.

ஏற்கனவே உள்நாட்டு பிரச்சினைகள் இலங்கை மன்னன் ஐந்தாம் மகிந்தனுக்கு தலைவலியை கொடுத்து ராஜராஜனின் படையெடுப்பு.

தமிழகத்தில் இருந்து வீரர்கள் கப்பல்கள் மூலம் தொடர்ந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட வண்ணமிருந்தன.

 ஒருவழியாக   இலங்கையில் ஒவ்வொரு பகுதியும் அடுத்தடுத்து சோழர்களின் கைவசம் வரவே இலங்கை மண்ணில் சோழர்களின் புலிக்கொடி பட்டொளி வீசி பறக்க தொடங்கியது.

 அது வரை இலங்கை மீது போர் தொடுத்த தமிழக மன்னர்கள் இலங்கையின் வடக்குப் பகுதியை மட்டும் தான் கைப்பற்றியுள்ளனர் 


 இலங்கையின் மற்ற பகுதிகள் மீதும் போர் தொடுத்து அவற்றையும் சோழ சாம்ராஜ்யத்தின் கீழ் கொண்டுவந்தார்.

 சோழப்  போரின் போது இலங்கையில் இருந்த பௌத்த விகாரைகளை சேதப்படுத்த படவில்லை.

 தவறுதலாக சேதமடைந்த பௌத்த விகாரங்களையும் விடயங்களையும்  புணரமைத்து கொடுத்தார் ராஜராஜன். 

இலங்கைப் போருக்குப் பின்னர் தமிழகத்திலும் புத்தர் சிலை உருவாக்கப்பட்டது.

 இலங்கையை வென்று கையோடு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்த சில சிற்றரசுகளையும் போர் புரிந்து வென்றார். 

ராஜராஜன் கலைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்துள்ளார்

குறிப்பாக கட்டடக்கலையில்.

காஞ்சிபுரத்தில் பல்லவர்கள் கட்டிய கைலாசநாதர் கோயிலை கண்ட ராஜராஜனுக்கு, இது போன்றதொரு கோயிலைக் கட்ட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

இது குறித்து கட்டிடக்கலைஞர்கள் சமயப் பெரியவர்கள் அமைச்சர்களுடன் ஆலொசனை மேற்கொண்டார். 

அதன் விளைவாக தமிழர்களின் பெருமைகளில் ஒன்றாக திகழும் தஞ்சை பெரிய கோயிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.

தஞ்சாவூர் சமவெளிப் பிரதேசம் என்பதால் கோயில் கட்டுவதற்கான கற்கள் திருச்சியில் இருந்து கொண்டு வரவழைக்கப்பட்டன.

 இக்கோயிலில் உள்ள பெரிய லிங்க சிலைகள் திருவக்கரையில் கொண்டுவரப்பட்டது.

 தஞ்சை பெரிய கோயில் முழுவதையும்  மரம் உலோகம் இவை எதையும் பயன்படுத்தாமல் வெறுமனே கற்களை கொண்டு கட்டி முடித்தார் ராஜராஜன். 

சுமார் 1,30,000 டன் எடையுள்ள கற்களை தாங்கி 216 அடி உயரத்தில் விண்ணை முட்டி நின்றது தஞ்சைப் பெரிய கோயில்.

தஞ்சைப் பெரிய கோயில் ராஜராஜேஸ்வரம் என்ற பெயரிலேயே கல்வெட்டுக்களில் குறிப்பிடப் பட்டது. 

மாறாக பிரகதீஸ்வரர் ஆலயம்பெரிய கோயில் ,பெருவுடையார் கோயில் என்ற பெயர்கள் எதுவும் கல்வெட்டுக்களில் குறிப்பிடப் படவில்லை.

 கோயில் கட்டுமான வேலைகளில் இருந்து அனைத்து தகவல்களையும் கோயில் கல்வெட்டில் பதித்தார் ராஜராஜன்.

 பொதுவாக கோயில்களில் அன்பளிப்பு,தானம் கொடுத்தவர்களின் பெயர்கள் மட்டுமே கல்வெட்டின் குறிக்கப்படுவது வழக்கம்.

ஆனால் தஞ்சை கோயிலுக்கு யார் யார் என்னென்ன கொடுத்தார்கள் என்ற விவரம் முழுவதையும் கல்வெட்டில் பொறிக்க மன்னன் ஆணையிட்டார்.

 மேலும் கோயிலை கட்டிய தலைமை சிற்பி குஞ்சரமல்லன் தொடங்கி சாதாரண ஊழியர்கள் வரை அனைவரது பெயரையும் கல்வெட்டில் பொறித்து சாதாரண மக்களையும் சரித்திரத்தில் இடம் பெறச்செய்தார் ராஜராஜசோழன்.

தொடக்கத்தில் பெரிய கோயிலின் கோபுரம் முழுவதையும் செப்புத் தகடு களால் போர்த்தி அதன்மீது தங்கத் தகடுகளை இராஜராஜன் அமைத்தார்.

ஆனால் பின்னர் ஏற்பட்ட படையெடுப்புகளில் கோயில் கோபுரத்தில் இருந்த தங்க தகடுகள் களவாடப்பட்டது.


ராஜராஜ சோழன் தனது கடைசி காலத்தை கும்பகோணம் அருகே உள்ள உடையாலுர் இடத்தில் 1011 ஆண்டு அவரது உயிர் பிரிந்தது.

அவரது சமாதி உடையாலுர்க்கு அருகியிலேயே அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 ஆனால் ராஜராஜனின் சமாதி இருக்குமிடம் ராஜராஜனின் சமாதியாக இருக்க வாய்ப்பில்லை எனவும் அவரது அஸ்தி மட்டுமே அந்த இடத்தில் வைக்கப்பட்டு இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.

 ராஜராஜசோழனின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் ராஜேந்திர சோழன் ஆட்சிக்கு வருகிறான்.

 அவன் சிறப்பான முறையிலே ஆட்சி செய்கிறார்.

அவரை தொடர்ந்து  சோழ சாம்ராஜ்யத்தை சரிவை நோக்கி  செல்லத் தொடங்கியது.

 கடைசியாக சோழ வம்சம் வீழ்ந்தாலும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரியவிலும் அக்கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் புகழும்.

Post a Comment

Previous Post Next Post