தஞ்சை, சோழ வம்சத்தின் தலைநகரம்.

அது மட்டுமல்ல, கலை மற்றும் கலாச்சாரங்களின் செழித்த நகரம். ஆச்சரியங்களின் உறைவிடமாக திகழ்கிறது, நம் தஞ்சை பெருந்தேசம்.தஞ்சையின் சிறப்பம்கள் அனைத்தையும் ஒரு பதிவில் விவரிக்க இயலாது.

 எனவே அதன் சிறப்பம்சங்களை ஒன்றை மட்டும் இப்பதிவில் காண்போம்.

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் 

தஞ்சாவூர் என்று கூறினாலே நமக்கு முதலில் ஞாபகத்தில் வருவது தஞ்சை பெரிய கோவில் தான்.

அத்துனை பெறுமை கொண்டது தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்.

சோழர்கக்ளின் கட்டிகலைக்கு மிகப்பெரிய சாண்று இந்த கோயில்.

  • கி.பி1010 ஆம் வருடத்தில் சோழ மன்னன் ராஜராஜ சோழனால் தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டது. 

ஆயிரம் வருடங்களாக மழை வெள்ளம் புயல் ஆகியவற்றை சமாளித்து, இன்றும் கம்பீரமாய் நிற்கும் தஞ்சைப் பெரியகோவில் உண்மையில்  ஓர் அறிவிக்கபடாத  உலக அதிசயமே.இக்கோவிலை பற்றி சற்று விரிவாக பார்போம். 

  • சோழர்கள் அனைவரும் சிவபக்தர்களா இருப்பதன் காரணமாக இக்கோவில் ஒரு சிவன் தலமாக இருப்பதில் ஆச்சரியமில்லை.
  • அதனை கோவிலுக்கு வருபவர்களுக்கு உணர்த்தும்  வகையில் 12 அடி உயர நந்தியினை  கோவிலின் நுழைவாயிலில் அமைத்துள்ளனர்.  
  • ஆனால் ஆச்சரியப்படுத்தியது என்னவோ இதன் கட்டடக்கலை பொறியியல் தான்.
  • இதன் விமான பகுதி(உச்சியில் உள்ள கலசப் பகுதி)  மட்டும் 80 டன் எடை கொண்டது.
  • ஆனால் அது அமைந்துள்ள இடமோ 216 அடி உயரத்தில்.
  • இந்த விமான பகுதியானது ஒரே கல்லினால் செய்ய பட்டது.
  • அதற்காக அவர்கள் தேர்வு கருங்கலானது ஏகஜாதி(Single Variety Stone) வகையை சேர்ந்தது.சோழ பொறியியலாளர்களின் பொருள் தேர்ந்தெடுக்கும்  திறன் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
  • இக்கோயிலை முடிக்க சுமார் 1,30,000 டன் கற்கள் பயன்படுத்தப்பட்டன.
  • மேலும் ஆச்சரியமூட்டும் தகவல் என்னவென்றால், தஞ்சை மாவட்டத்தை 60 கீ. மீ சுற்றி எந்த மலையோ, பாறை மேடுகளோ இல்லை.  
  •  எந்த ஒரு நவீன தொழில் நுட்பங்கள் இல்லாமல் இதனை செய்தது, நம்மை வியப்பில் ஆழ்ந்துகிறது.

ஆனால் ஏன்  அவர்கள் இவ்வாறு செய்தார்கள்?எவ்வாறு செய்திருப்பார்கள்?இதனை பற்றி  நாம் என்றாவது யோசித்தது உண்டா!

ஏன் 80 டன் எடை கொண்ட கல்லினை  உச்சியில் வைக்க வேண்டும்? 

நவீன கட்டிட பொறியியலின் படி,ஒரு கட்டிடத்தை உருவாக்க, அதன் உயரத்தில் நான்கில் ஒரு பங்கை அடித்தலமாக அமைக்க வேண்டும்.

ஆனால் இக்கோவிலின் உயரமோ 200 அடிக்கு மேல் .

எனவே குறைந்தது 50 அடியாவது அடித்தளம் அமைக்க வேண்டும்.
ஆனால் இக்கோயிலின் அடித்தளம் வெறும் 5 அடிகள் தான்!

பாறைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி (Interlocking method) கோயிலைகட்டியுள்ளனர்.

இப்பாறையின் ஒரு பக்கமானது கூர்மையாகவும் மற்றொரு பக்கமானது குழியாகவும் இருக்கும்.

மேலும் இப் பாறைகளுக்கு இடையே எந்தவிதமான  ஒட்டு பொருளோ கிடையாது.

முழுக்க முழுக்க புவி ஈர்ப்பு விசையே நம்பிக் கட்டப் பட்டது இக்கோயில்.

ஏவ்வாறு செய்தனர்?

தஞ்சை சுற்றி 60 கிலோ மீட்டர் சுற்றளவில் எந்த ஒரு மலையோ இல்லாத நிலையில் எவ்வாறு 1,30,000 டன் எடையுள்ள பாறைகளை கொண்டு வந்திருப்பர் தஞ்சாவூருக்கு?

இதற்கு விடையாக ,தஞ்சையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருச்சி மாநகரத்தில் இருக்கும் மலைகளில் இருந்து இக்கோவிலுக்கான  பாறைகள் கொண்டு வரப்பட்டன.

இதற்காக சுமார் 5 ஆயிரம் யானைகளையும்   1 லட்ச கைதிகளையும் இராஜராஜன் சோழன் பயன்படுத்தியுள்ளார்.

இக்  கோவிலினை கட்டிமுடிக்க சுமார் ஆறு ஆண்டு காலம் ஆனது.

இந்த  ஆறு ஆண்டுகளில் நான்கு ஆண்டுகள் கோபுர கலசத்தை உச்சிக்கு எடுத்துச் செல்வதற்கு மட்டுமே ஆனது.

பிரம்மாண்டமான வெள்ளை மற்றும் கருப்பு யானைகளால் உயர்த்தப்பட்டது தஞ்சை பெரிய கோயிலின் கிரானைட் கல் கோபுரம்.

முதலில் அவர்கள் சிவப்பு மண், காவிரி நதி மணல் ஆகியவற்றைக் கொண்டு செயற்கை சிறிய மலைகளை உருவாக்குகிறார்கள்.

பின்னர் அதன் மேல் கோபுரத்தை  உயர்த்த   சரிவான பாதையினை சுமார் 4 கிலோ மீட்டருக்கு உருவாக்கினர்.

ஆயிரக்கணக்கான பொறியாளர்கள்,  5 ஆயிரம் யானைகள் , 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குதிரைகள் ,லட்சக் கணக்கில் கைதிகள் மற்றும் ஒரு மன்னன்,  இவர்கள் சிந்தனையில் தோன்றி , 6 ஆண்டு கால உழைப்பில் உருவாகிய ஒரு கட்டவியல்  ஆச்சரியம் , 6 நில நடுக்கங்களை சந்தித்த பின்னரும் , ஆயிரம் ஆண்டுகளாய் தலைநிமிர்ந்து நிற்கும் நம் தஞ்சை பெரிய கோயில் அறிவிக்கப்படாத உலக அதிசயமே.

இராஜராஜ சோழன் முதல் கடைசி அடிமட்ட தொழிலாளர்களை வரை 
இக்கோயில் உருவாக அரும்பாடுபட்ட அனைவரது பெயரும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

இதுவே என் தமிழனின் நன்றி மறவாமைக்குச் சான்றாகும்.


        





Post a Comment

Previous Post Next Post