குறுநில மன்னனாக இருந்து ,பின் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை தன் கட்டுப்பாட்டில் கீழ் கொண்டு வந்தவர். 

 சோழ  ஆட்சி பகுதிகளை விரிவுபடுத்த விதை போட்டவன். 

கல்லையும் களிமண்ணையும் கொண்டு காலத்தால் என்றுமே அழிக்க முடியாத அதிசயத்தை அளித்தவர்.

இமயம் வரை சென்று கொடி நட்டு வந்தவன்.

 1800ஆண்டு கடந்தும் இன்னும் விடை அறிய முடியாத வினாக்களை அழித்தவர். 

 இன்று தமிழ் பெருமையை உலகறிய  அடிக்கல் நாட்டியவர்.

இவரின்  தந்தை இளஞ்சேட்சென்னிஆவார்.

கரிகாலனின் சொந்த வாழ்க்கையைப்பற்றி பேரளவிற்கு ஒரு விவரமும் கிடைக்கவில்லை.

அவர் பெண்களுடனும் பிள்ளைகளுடனும் மகிழ்ந்திருந்தான் என்று பட்டினப்பாலை ஆசிரியர் உத்திரங்கண்ணனார் பொதுப்படையாக கூறுகிறார்.

நாங்கூரைச்சேர்ந்த வேளிர் குலப்பெண் ஒருத்தயை கரிகாலன்(karikala chola) மணந்தான் என்று உரையாசிரியர் நச்சினார்கினியார் அவரது காலத்தின் நிலவிய மரபுவழிச் செய்தியின் அடிப்படையில் கூறுகிறார்.

கரிகால் சோழனின்(karikala chola) மகள் ஆதிமந்தி. 

இவருக்கு இளம் வயதில் ஏற்பட்ட தீ விபத்தில் கால் கருகியது.

எனவே கரிகாலன(karikala chola) எனப் பெயர் பெற்றான் என்று பாடல்கள் கூறுகின்றன. 

ஆனால் இதற்குப் பின்னர் அவர் வடமொழி செல்வாக்கை பெற்ற போது யானைகளின்(கரி) எமன்(காலன்) என்று பெயருக்கு விளக்கம் தரப்பட்டது.

கரிகாலனுக்கு கரிகால் வளவன், கரிகால் பெருவளத்தான்(karikala Peruvalathan) , திருமாவளவன் போன்ற பல்வேறு பெயர்களில் அழைக்கப் பட்டார். 

அரியணை ஏறுவதற்கு முன் கரிகாலன்(karikala chola) மீது குற்றம் செலுத்தி சில துரோகிகள் சிறைக்கூடத்தில் அடைத்தனர்.

 அங்கேயே வைத்து அவனைக் கொன்றுவிட சிறை கூட்டத்திற்கு தீ வைத்ததாகவும், தான் கற்ற தற்காப்பு கலைகளைக் கொண்டும் தாய்மாமன் உதவியுடன் தப்பித்து துரோகிகளை அழித்து அரியணை அமர்ந்தார்.

அரசுரிமை இருந்தும் அரியனை ஏற முடியாமல் , பகைவரால் சூழப்பட்ட இடத்தில் இருந்த இவரை ,பிடர்த்தலை என்னும் பெயர்பெற்ற ஒரு பட்டத்து யானை அடையாளம் கண்டு ,இவருக்கு மாலை சூட்டி அரியணையில் செங்கோலை செலுத்தினான் என சில இலக்கியக் குறிப்புகள் பொதுவாக சொல்கிறது. 

ஆரம்பத்தில் குறுநில மன்னனாக இருந்த கரிகாலன்(karikala chola) ,பின் பல துரோகிகளையும், சில எதிரிகளையும் களத்தில் வென்று பலரைக் கொன்று சிறிது சிறிதாக தன் ராஜ்ஜியத்தை விரிவுபடுத்த விதைகளை போட்டுக்கொண்டிருந்தார்.

கரிகாலன்(karikala chola) ஆட்சியில் நடைபெற்ற முதல் பெரும் போர் வெண்ணிப் போர். 

வெண்ணி என்ற இடத்தில் நடைபெற்ற போரில் கிடைத்த வெற்றி கரிகாலனுக்கு நிலையான அரியணையை  பெறச் செய்தது.

தமிழகத்தின் மூவேந்தர் தலைவனாக விளங்குமாறு செய்ததும் இப்போரே.

 இப்போரின் மூலம் தனக்கெதிராக அமைக்கப்பட்டிருந்த ஒரு பெரும் கூட்டணியை கரிகாலன்(karikala chola) முறியடித்தார்.

 இப் போரில் தோல்வியுற்ற சேரமான் பெருஞ்சேரலாதன் தனக்கு அவமானம் ஏற்பட்டதாகக் கருதி வடக்கிருந்து உயிர் நீத்தார்.

தஞ்சாவூரிலிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் வெண்ணிப் போர் நடந்த இடம் ,கோவில்வெண்ணி என்று இன்றும் இருக்கிறது.

பின் பல போர்களில் வெறியோடு போரில் போர்க் கலங்களை வெற்றிகளாக மாற்றினார்.

பாலக்காடு, திருவாங்கூர், கொச்சி, தென் மலையாளம், வட மலையாளம் ஆகிய பகுதிகளை கொண்ட சேர நாட்டை அடைந்து நாடுகளை வென்று கரிகாலன்(karikala chola) தன் பேரரசின் கீழ் சேர்த்துக் கொண்டார்.

பின் தொண்டை நாட்டை கைப்பற்றி முன்சென்று வடக்கே வேங்கடத்தையும்  தன் ஆட்சியின் கீழ் சேர்ந்து கொண்டார்.

அதன் பின் ஒரு பெரும் சேனையுடன் வடக்கு நோக்கி புறப்பட்டு இமயம் வரை சென்று திரும்பினார்.

இப்படையெடுப்பில் கரிகாலன்(karikala chola) இமயம் வரை சென்றதோடு வச்சிரம், மகதம் ,அவந்தி போன்ற சில நாடுகளை வென்றார்.

இமயத்தையே பார்த்தவர் ,கொஞ்சம் இலங்கையையும் பார்த்தார்.

கப்பல் படை வீரர்களை அழைத்துக் கொண்டு ,இலங்கைத் தீவை அடைந்து அதனை வென்று, தன் துணை தலைவன் ஒருவனை அங்கு அரசனாக்கி விட்டு திரும்பினான் என கலிங்கத்துப் பரணி கூறுகிறது.

 வாகைப் பெருந்தலை என்னுமிடத்தில் ஒன்பது குறுநில மன்னர்களின் கூட்டணியை கரிகாலன்(karikala chola) தோற்கடித்தார்.

கரிகாலன்(karikala chola) ,சோழகுலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தார்.

இவரது வரலாற்றை அறிவதற்கு சிலப்பதிகாரம் ,பெருநராற்றுப்படை, பட்டினப்பாலை ,எட்டுத்தொகையில் உள்ள சில பாடல்கள் ,கலிங்கத்துப்பரணி ,பெரிய புராணம், மற்றும் வானவல்லி புத்தகம் ஆகிய அனைத்தும் துணை செய்கின்றன.

சங்க காலத்தைச் சேர்ந்த சோழ மன்னர்களில் சிறப்புமிக்க மன்னன்தான் கரிகால சோழன்.

தொண்டை நாட்டையும் சோழ நாட்டையும் பலப்படுத்தினார்.

காஞ்சி நகரத்தை கரிகாலன்(karikala chola) புதுப்பித்தார்.

அவர்கள் விவசாயம் செய்ய நிலங்களை விளைநிலங்களாக மாற்றினார்.

சோழ நாடு என்றும் சோற்றுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்க செய்தவர்.

கரிகால(karikala chola) சோழன் இரண்டாம் நூற்றாண்டில் கட்டிய அணைதான் கல்லணை.

தற்போது புழக்கத்தில் உள்ள பழமையான ஒரே அணை கல்லனை தான் இதுவே.

உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது.

மணலில் அடித்தளம் அமைத்து, கல்லணையை கட்டிய பழந்தமிழர் கட்டவியல் நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாக உள்ளது.

இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது.

கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அற்புதமான படைப்பு ஆகும். 

காவிரி ஆற்றின் கரைகளை உயர்த்த கட்டினார் என்று ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த தெலுங்குச் சோழ மன்னன் உன்னிய குமரனின் பட்டயங்களில் காண்கிறோம்.

தனக்கு ஒப்பாரும் இல்லை தனக்கு மிக்காரும் இல்லை என அழியா புகழை பெற்றார்.

DEAD

கரிகால் பெருவளத்தான்(karikala Peruvalathan) சித்ரா பள்ளி என்ற இடத்தில் உலக வாழ்வை நீத்தார் என்று தெரிகிறது.

வைதீக மதத்தில் கரிகாலனுக்கு இருந்த நம்பிக்கை பற்றியும் அவன் இறந்ததால் ஏற்பட்ட துயரத்தைப் பற்றியும் கருங்குழல் ஆதனார் என்னும் புலவர் பாடியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post