ஏன் கரிகால் பெருவளத்தான் கட்டிய கல்லணை பலரும் அதிசயமாக உற்று நோக்குகிறார்கள்?
ஆதியில் தோன்றிய அணைகளின் வரலாற்றுச் சுவடுகளை திரும்பிப் பார்த்தால், காணாமல் போன அணைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
அதில் விரல் விட்டு எண்ணத்தக்க வகையில் உள்ள அணைகள் மட்டுமே இன்றளவும் புழக்கத்தில் உள்ளன.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் கரிகாலன் கட்டிய கல்லணை,இன்றுவரை உறுதியுடன் நின்று சோழவளநாட்டு நீர் பங்கீடு செய்து வருகிறது .
இயற்கையோடு இணைந்து வாழத் தொடங்கிய மனிதன், இயற்கையை தன்வயப்படுத்தி உணவு உற்பத்தியையும் தொடங்கினான்.
அப்போது இயற்கை சீற்றங்களையும் எதிர்கொண்டுள்ளான்.
தமிழர்களின் வாழ்விலும் வெள்ளப்பெருக்கு எனும் இயற்கை சீற்றங்கள் எட்டிப் பார்த்துள்ளது.
தொல்காப்பியமும் மதுரைக் காஞ்சியும் ,பண்டைய தமிழர்கள் ஆற்று நீரை தடுத்து அணை கட்டிய வரலாற்றை எடுத்துச் செல்கிறது.
வேளாண் மக்கள் ஒன்று கூடி கரையை பலப்படுத்துவதும், வெள்ளம் வடிந்த பின்பு நிலத்தில் தேங்கிய வண்டல்மணலைவெளியேற்றுவதும் தொடர்கதையாகவே இருந்து உள்ளது.
இந்த பெரும் வெள்ளத்தால் ஏற்படும் அழிவுகள் காரணமாக வேளாண் உற்பத்தி பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியது.
உணவுத் தட்டுப்பாடும் பல சமயங்களில் ஏற்பட்டுள்ளது.
இதனால் பர்மா போன்ற நாடுகளில் இருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்யப்படும் நிலை கூட ஏற்பட்டுள்ளது.
கடல் கடந்து இலங்கைக்கு மாநாடுகளில் விளைந்த உணவுப் பொருட்களும் தானியங்களும் சோழர்களின் துறைமுகமான காவிரிப்பூம்பட்டினத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இந்த செய்தி மன்னரின் கவனத்திற்கும் சென்றுள்ளது.
உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த கரிகால் சோழனுக்கு வெள்ளத்தால் நாட்டு மக்கள் கடும் அவதி தலை வலியை உண்டாக்கியுள்ளது.
இதற்கு மாற்று என்ன என்று யோசித்தான் மன்னன் கரிகாலன்.
பொங்கி வரும் காவேரியின் வேகத்தை குறைத்து அணை கட்டுவதற்கு என்ன வழி என்று ஆலோசித்தார்.
இப்படி உருவானது தான் கல்லணை.
பண்டைய காலங்களில் அணைகளே கிடையாது.
அணை கட்டுவதற்கு தேவையான பொறியியல் அறிவியல் வளராத நேரம்.
அணை கட்டுமானத்திற்கு தேவையான பல நூறு எந்திரங்கள் கண்டறியப்படாத காலம்.
நீரியல் ஆய்வு, நிலவியல் ஆய்வு ,சூழலியல் ஆய்வு, பருவநிலை ஆய்வுகள் எல்லாம் தொடங்காத தருணம்.
ஒன்றுமே இல்லாத காலத்தில் பண்டைய தமிழரின் நீர் மேலாண்மை பறைசாற்றும் விதமாக காவிரியில் எழுந்து நின்றது கல்லணை.
நாட்டில் என்னேரமும் பெருக்கெடுத்து ஓடும் நீரினை தடுத்து கட்டப்பட்டது கல்லணை.
அவையில் ஆலோசித்த தொழில் நுட்பத்தின் படி, கற்களை ஒவ்வொன்றாக ஆற்றில் விடப்பட்டது.
அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் புதைந்தன.
கடற்கரையில் அலை அடித்தால் நம் கால்கள் மணலில் புதையும் என்கிற எளிய தொழில்நுட்பம் அங்கே பயன்படுத்தப்பட்டது.
பாறைகளின் அழுத்தம், நீரோட்டத்தில் ஏற்பட்ட மணல் அரிப்பு காரணமாக பாறைகள் கீழே இறங்கியது.
இரண்டு கற்களும் ஒன்றுக்கொன்று ஒட்டிக் கொள்ள களிமண் கலந்த பசை போன்ற பொருள் பயன்படுத்தப்பட்டது.
உலகில் இத்தனை ஆண்டுகள் அதாவது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் ஒட்டிக் கொள்ளும் ஒரு பசை இது வரை கண்டு பிடிக்கவில்லை என்பதே உண்மை.
இதுவே கல்லணை கட்ட பயன்பட்ட தொழில்நுட்பம்.
எளிய தொழில்நுட்பம் தான்.
ஆனால் கல்லணையில் ஆய்வு செய்யும் வரை எவர் மதிக்கும் எட்டாத தொழில்நுட்பம் .
இந்த பாறைகள் எங்கே கிடைத்தன? எப்படி கொண்டுவரப்பட்டன ?நீரை பிளந்து ,பெரு வெள்ளத்தின் நடுவே எவ்வாறு பொருத்தப் பட்டன? என்று ஆய்வுகள் இன்றளவும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
திருச்சியிலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குளித்தலை அருகே காவிரியின் வடகரையிலுள்ள திருங்கோய்மலை பகுதிகளிலிருந்து பெருங்கற்கள் கொண்டுவரப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மலையைக் குடைத்துப் பாறைகளைப் பெயர்த்து எடுக்கவும், கட்டுமானத்தில் உதவி செய்யவும் இலங்கையின் ஒரு பகுதியை வென்று சிறைபிடிக்கப்பட்ட சிங்கள சிப்பாய்கள் வேலையாட்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
அணை கட்டுவதற்கான தொழில்நுட்பம் தெரிந்த சோழர்களுக்கு ,சுத்தியல் கடப்பாறை ,மண்வெட்டி , கயிறு மரங்கள் மட்டுமே பயன்படும் பொருளாக இருந்துன.
கல்லணையில் இருந்து பிரிந்து செல்லும் வெண்ணாற்றங்கரையின் கச்சமங்கலம் பகுதியில் கற்சிலை எனப்படும் சிறிய தடுப்பணை உருவாக்கப்பட்டது.
கல்லணையின் நீளம் 329 மீட்டர் அல்லது 1080 அடி அகலம் 12.20 முதல் 18.30 மீட்டர் அல்லது 40 முதல் 60 அடிக்கு மேல்.
அணையின் உயரம் 4.57 முதல் 5.9 மீட்டர் அல்லது 15 முதல் 18 அடி.
அணையின் அடித்தள பரப்பும் மட்டும் 54 ஆயிரம் சதுர அடி.
காவிரி ஆறு, கல்லணையை வந்தடைந்தது கொள்ளிடம் , காவிரி, வெண்ணாறு and புது ஆறு என நான்காக பிரிக்கிறது.
சிமெண்டின் மூலம் கட்டப்படும் பாலங்கள் கூட, அதிகபட்சம் 500 ஆண்டுகளில் பலவீனம் அடைந்து விடுவிடும்.
ஆனால் 2000 ஆண்டுகள் நெருங்கியும் பலமுடன் காணப்படும் கல்லணை நம்மை வியப்பில் ஆழ்ந்துகிறது.
இந்திய நீர் பாசனத்தின் தந்தை என அறியப்படும் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கில பொறியாளர் கல்லணையை பல ஆண்டுகாலம் ஆராய்ந்தார்.
வெள்ளத்தாலும் வறட்சியாலும் தஞ்சை மாவட்டம் வலிமை குன்றிய போது 1879 இல் காவிரி பாசன பகுதி தனி பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் நியமிக்கப்பட்ட சர் ஆர்தர் காட்டன் பழந்தமிழரின் அணை கட்டும் திறனையும் பாசன மேலாண்மையை உலகுக்கு எடுத்துக் கூறினார்.
காவிரிக்கும் கல்லறைக்கும் மன்னர் காலங்களில் வேறு பெயர்கள் இருந்திருக்கலாம்.
சங்க இலக்கியங்களில் கரிகால சோழப் பேராறு என்று குறிப்பிடப்படுகிறது.
பொன்னி ஆறு என்ற பெயரும் உண்டு.
ஆனால் கல்லணைக்கு கிரான்ட் அணைக்கட் என்ற பெயரை சூட்டினதும் இவரே.
இந்த அணையைக் கட்டிய கரிகால சோழனை கவுரவிக்கும் விதமாக ,கல்லணையிலிருந்து திருக்காட்டுப் பள்ளி செல்லும் சாலையில் காவிரியாற்றின் கரை ஓரத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மண்டபத்தில் யானை மீது கரிகால்சோழன் அமர்ந்த நிலையில், வெண்கலச் சிலையை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கல்லணை திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து 25 நிமிட தூரத்தில் தஞ்சாவூரில் இருந்து ஒன்றரை மணி நேர பயண தொலைவிலும் அமைந்திருக்கிறது.
1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது
பல இடங்களிலிருந்து தினந்தோறும் இந்த அணையை ஏராளமானோர் வந்து பார்த்து சென்றதால் இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது
Post a Comment