சோழர்களின் வாழ்வியலிலை காணும் பயணத்தில், எங்களோடு சேர்ந்து பயணிக்கும் என் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை என் அன்பான வணக்கம்.
சென்ற பதிவில் சோழ மன்னர்களான இளஞ்சேட்சென்னி ,எல்லாளன் போன்றோரின் வாழ்வியலை பார்த்தோம்.
இந்தப் பதிவில் கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஒரு மாவீரனின் உண்மை வரலாறுகளை காணும் உள்ளோம்.
வாருங்கள் பயணிப்போம் சோழர்களின் வரலாற்று பயணத்தில்.
சோழர்களில் முதன்மையானவராக விளங்கியவர் இளஞ்சேட்சென்னி.
இளஞ்சேட்சென்னிக் மகனாகப் பிறந்து, இமயம் முதல் இலங்கை வரை புலிக்கொடி நாட்டிய பெருமைக்குரியவர் தான் கரிகால சோழன்.
வெண்ணிப்போர் நடத்தி, எதிரிகளை வென்று வேங்கைக் கொடி கொண்டு அட்சி புரிந்தவர் கரிகால சோழன்.
காவிரியில் கல்லையும் ,மண்ணையும் மட்டுமே கொண்டு கல்லணையைக் கட்டியவர்.
கரிகால சோழன் சிறுவயதாக இருக்கும்போதே சேர மன்னனால் கொல்லப்பட்டார் இளஞ்சேட்சென்னி.
தன் தந்தையின் மறைவிற்குப் பிறகு பகைவரால் சூழப்பட்டதன் காரணமாக, தன் நாட்டிலிருந்து தப்பி பிழைத்து சிறிது காலம் தலைமறைவு வாழ்க்கையே வாழ்ந்தார் பெருவளத்தான்.
சில காலங்களிலேயே பிடர்தலை என்று பெயர் பெற்ற யானையால் அடையாளம் காணப்பட்டு, மாலை சூட்டி, அரியணையில் ஏறி, செங்கோல் செலுத்தினான் என்பது வரலாறு.
ஆனால் தொடர்ந்து வந்த எதிரிகளின் சூழ்ச்சியால் தடுக்கப்பட்டு அரியணையில் அமர விடாமல் கைதியாகி சிறையில் தள்ளப்பட்டார் பெருவளத்தான் என்ற கரிகால சோழன்.
சிறையிலேயே இவரை கொல்ல வேண்டும் என்று எதிரிகளால் எடுக்கப்பட்ட முடிவின் விளைவாக கரிகாலன் அடைக்கப் பட்டிருந்த சிறைக்கு தீ வைத்தனர் சூழ்ச்சியாளர்கள்.
தீக்கு மத்தியிலிருந்து அக்கினியின் அரசனாக தம்பி வந்தார் கரிகாலன்.
இதற்க்கிடையே இவருக்கு கால் கருகியது.
இதனாலேயே இவருக்கு கரிகாலன் எனும் பெயரும் வந்தது.
"தென்னை வளர்ச்சி பெற்ற பின்னர்தான் விழித்திருந்த பகைவரின் பொடியை கரைத்து மேலே ஏறித் தன் பெண் யானையுடன் சேர்ந்தது போல" கரிகாலன் அரியணை ஏறினான் என்று பட்டினப்பாலை நமக்குத் தரும் பாடல்.
அதுமட்டுமல்லாது இதுவே கரிகாலன் அரியணையேறிய செய்தியும் கூட.
தன் தாய் மாமனாரான இரும்பிடர்த்தலையாரின் ஆலோசனைப் படியும் அவரின் அறிவுரைப்படி திறம்பட ஆட்சி செய்தார் கரிகாலன்.
மாபெரும் வீரன் அவன் கரிகாலன் அழகிய போத்தல்களை கொண்டவராக விளங்கினார் என்று கூறுகிறது பெருநாள் பாடல்.
சோழ நாட்டைக் கைப்பற்றும் நோக்கில் 9 சிற்றரசர்கள் சேர்ந்து பாண்டியனிடம் ஆசை வார்த்தைகளை கூறினர்.
ஆசைக்கு மயங்கிய பாண்டியனோ உதவி செய்ய தயாராகிறார்.
இதனை அறிந்த சேரமான் பெருஞ்சேரலாதன் இவர்களின் கூட்டணியில் இணைந்து கரிகாலன் மீது போர் தொடுத்து, சோழ தேசத்தை கைப்பற்ற நின்ற இடம் தான் இன்றைய தஞ்சை மாவட்டத்தில் இருந்து 24 மைல் தொலைவில் உள்ள கோயில் வெண்ணி எனும் ஊர் ஆகும்.
இந்த ஊரில் நடந்த போர் தான் வெண்ணிப்போர் ஆகும்.
இதுவே கரிகாலனை உலகறியச் செய்து அவன் புகழை உலகெங்கும் பரப்பிய போதும் கூட.
9 சிற்றரசர்களும் ஒன்று சேர்ந்து எதிர்த்து நின்ற போதிலும், போர்க்களத்தில் வென்றார் கரிகால பெருவளத்தான்.
தன் தலைமையும், தன் வலிமையும் நம்பி தன் படைகளை முன்னோக்கி செலுத்துகிறார் கரிகால் பெருவளத்தான்.
ஒரு கட்டத்தில் சேரனுடன் நேருக்கு நேர் நின்று போர் புரியும் தருனமும் வருகின்றது.
தன் முழு வலிமையையும் பயன்படுத்தி தான் வைத்திருந்த ஈட்டியை சேர மன்னன் பெருஞ்சேரலாதன் நெஞ்சில் பாயச்சிகிறார் கரிகால் பெருவளத்தான்.
அந்த ஈட்டியோ சேரனின் நெஞ்சை துலைத்து, புற முதுகு வழியாக வெளியே வருகிறது.
நெஞ்சில் புண்பட்டது பெருமையாகக் கருதினாலும் முதுகில் புண்பட்டதை அவமானமாய் கருதி, வடக்கிருந்து உயிர் நீத்தார் சேர மன்னன் பெருஞ்சேரலாதன்.
அந்தப் போருக்குப் பிறகு சேரனுக்கும், பாண்டியனுக்கும் !9 சித்தர்களுக்கும் தலைமை தாங்கும் தலைவராக உருவெடுத்தார் கரிகால் பெருவளத்தான்.
படையை வடக்கு நோக்கிச் செலுத்தினார்.
இமயம் வரை சென்று புலிக்கொடியை நாட்டினார்.
ஈழத்தின் மீது படையெடுத்துச் சென்று சிங்கள மன்னர்களை வென்று, பன்னிரண்டாயிரம் பிணைக்கைதிகளை பிடித்து வந்து கல்லணையைக் கட்டி, "சோழ வள நாடு சோறுடைத்து" என்னும் கூற்றுக்கு ஏற்ப, சோழ நாட்டை வளம் பெறச் செய்தார் கரிகால் பெருவளத்தான்.
இத்தகைய மாபெரும் வீரன் தன் எண்பதாவது வயதில் சூரப்பள்ளி என்னுமிடத்தில் வாழ்வை நீத்தார்.
இந்த சூரப்பள்ளி என்பது ஒரு சிவ தளமாகும்.
குறுநில மன்னராக இருந்து தன் எல்லையை இமயம் முதல் இலங்கை வரை, விரிவு செய்த பெருமைக்கு உரியவர் கரிகால சோழன். .
எதற்கும் அஞ்சாது, எதிர்த்து நிற்கும் அவருடைய தைரியமும் துணிச்சலும் வெற்றிக்கு காரணமாக அமைந்தது .
கல்லணையை கட்டி ,விவசாயத்தை செய்து சோழ வள நாடு சோறுடைத்து என்று உலகிற்குக் காட்டிய மாபெரும் வீரன்.
Post a Comment