இன்றைக்கு இருக்கும் வங்கதேசத் தோட ஒரு பகுதிதான் கௌட தேசம்.
அந்த தேசத்தில் இருந்து, ஒரு நாள் இரவு வேளையில் சத்ரிய குடியில் பிறந்த இரணியவர்மன் என்னும் பெயர் கொண்ட ,அந்த நாட்டினுடைய இளவரசன் யாருக்கும் தெரியாமல் ,யாரிடமும் சொல்லாமல் நாட்டை விட்டு தன் குதிரையோடு வெளியேறினார்.
அவர் கூடவே ஒரு சொறிநாயூம் பின் தொடர்ந்து போகுது.
ஒரு நாட்டின் இளவரசன் இப்படி யாருக்கும் தெரியாமல் , அதுவும் நள்ளிரவில் ஏன் வெளியேற வேண்டும்?
என்ன காரணம்? என்ன பிரச்சனை?
அந்த நாட்டினுடைய அரசன் தன் மகனாகிய இரணியவர்மனுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று ஏற்பாடு செய்தார்.
ஆனால் இரணியவர்மனுக்கு தன் உடம்புல இருக்குற குறைபாட்டால் திருமணம் வேண்டாம் என்று மறுக்கிறார்.
அதை தனது பெற்றோரிடமும் சொல்கிறார்.
ஆனால் இரணியவர்மனின் பெற்றோர் அதை கேட்பதாக இல்லை.
இதனால் மனமுடைந்து போன இரணியவர்மன் , நாம் ஏன் இங்கு இருக்க வேண்டும்? இருந்தால் தானே திருமணம் செய்து வைப்பார்கள் என்று நாட்டை விட்டு வெளியேறுகிறார்.
சிலநாட்கள் பயணம் தொடர்கிறது.
அந்த பயணத்தின் வழியே தில்லை மரம் நிறைந்த ஒரு வனப்பகுதிக்குள் செல்கிறார் .
நீண்ட தூரம் பயணத்தினால் கலைப்படைந்து போனது குதிரை.
எனவே இரணியவர்மனும் ஓய்வெடுக்கலாம் என்று என்னினார்.
ஒரு மரத்துல அந்த குதிரை கட்டி வைத்து விட்டு, இரணியவர்மனும் அந்த மரத்துக்கு அடியில் அமர்ந்து ஓய்வெடுக்க தொடங்கினார்.
ஓய்வெடுக்க சென்ற இடத்தில் திரும்பிப் பார்க்கும் போது,மரத்துக்கு பக்கத்தில் ஒரு லிங்கமும், லிங்கத்திற்கு பக்கத்துல ஒரு முனிவர் தியானமும் பண்ணிட்டு இருந்தார்.
இதை பார்த்த இரணியவர்மனுக்கு ஒரே ஆச்சர்யம்.
இவ்வளவு பெரிய காட்டில் ,தனியே ஒரு முனிவர் உட்கார்ந்து தியானம் செய்து கொண்டிருப்பது ரொம்பவே ஆச்சர்யம் இருந்தது.
அவர் பக்கத்துல போயிட்டு லிங்கத்தை வழிபட்டார் இரணியவர்மன்.
வழிபட்டு விட்டு,அந்த முனிவர் எப்போ கண் திறப்பார் என்று அங்கேயே அமர்ந்து கொண்டிருந்தார்.
ரொம்ப நேரம் கழிச்சு அந்த முனிவரும் கண் திறந்து பார்த்தார்.
பார்த்த உடனே இரணியவர்ம் கிட்ட, நீ யாருப்பா? இங்க என்ன நீ பண்ற ?என்று கேட்கின்றார்.
உடனே இரணியவர்மனும் ,நான் ஒரு நாட்டினுடைய இளவரசன், இதுதான் என் பிரச்னை என்று தன் கதையைச் சொல்கிறார்.
அவர் கதையை கேட்டுட்டு முனிவரும் ஒரு யோசனை கூறினார்.
அருகில் குளத்துல நீ முந்தி எழுந்துட்டு வா னு சொல்றாரு.
இரணியவர்மன் அந்த குளத்தை பார்கின்றார்.
அந்த குளத்தை படுத்தவுடனே இரணியவர்மனுக்கு ஒரே அறுவருப்பாக இருக்கு.
அந்த குளம் முழுக்க பாசி படர்ந்து ,குப்பையும் கூழமுமா இருக்கு.
அந்த குளத்தை பார்த்தவுடனே அவர் அங்கேயே நிற்கிறார்.
ஆனால் அவர் பின்னாடியே வந்து சொறிநாய் யோசிக்காமல் , குளத்தில் விழுந்து எழுந்து வந்தது.
அந்த எழுந்து வந்ததும் இரணியவர்மனுக்கு ஓரே ஆச்சரியம்.
ஏன்னா அந்த சொறிநாயின் உடலில் இருந்த காயங்கள் எல்லாம் காணாமல் போனது.
அதை பார்த்த இரணியவர்மனும், அந்த குளத்தில் முங்கி எழுந்தார்.
உடனே அவருடைய உடலும் பொன் நிறமாக மாறுகிறது.
இதற்கிடையில் கௌட தேசத்தினுடைய அரசன் ,தன் மகனை தேட படைகளை அனுப்பி வைக்கிறார்.
அந்த படை, தில்லையிலிருந்து இரணியவர்மனை கூட்டிட்டு போறாங்க.
திருமணமும் மிக சிறப்பாக, கோலாகலமாய் நடக்கிறது.
திருமணம் முடிந்த கையோடு, தனக்கு உதவிய முனிவரை பார்க்கலாம் என்று இரணியவர்மன் ஒருநாள் அந்த காட்டிற்கு திரும்பி வந்தார்.
தனி மரமாக அந்த காட்டில் தியானம் செய்து கொண்டிருந்த முனிவர் கிட்ட நன்றி கூறினார் இரண்யவர்மன்.
அதற்கு அந்த முனிவர் , இங்கே ஒரு கோயில் கட்டி வழிபடும் சொல்லி உத்தரவு போட்டார்.
இரண்யவர்மனும் அங்கு ஒரு கோயிலை கட்டி, கோயிலில் லிங்கத்தையும் அதிலே முழு உருவச் சிலையை வைக்கிறார்.
வடக்கிலிருந்து அந்தணர்களை அழைத்து வந்து கும்பாபிஷேகமும் நடத்தினார்.
கோவில் கட்டி முடித்த கையோடு ,அந்த முனிவர் இரண்யவர்மனை, கோயிலோட படியில உட்கார வச்சி, புலிக்கொடியோட ,நீ தான் இந்த நாட்டுக்கு அரசன் என்று முடிசூட்டுகிறார்.
இதிலிருந்துதான் சோழர் குலம் ஆரம்பிக்குது.
இரண்யவர்மனால் , அமைக்கப்பட்ட இந்தக் கோயில் தான் இன்னைக்கு இருக்க சிதம்பரம் நடராஜர் கோயில்.
அந்த படிதான் பஞ்சாட்சரப் படி.
இன்னிய வரைக்கும் சோழ மன்னர்கள் அங்குதான் முடிசூட்டிக் கொள்வார்கள்.
இரண்யவர்மனுக்கு முடிசூட்டிய அந்த முனிவர் தான் புலிக்கால் சித்தர்.
அந்த முனிவருடைய உடல் மனித வடிவிலும் கால் புலி போன்ற உருவத்தில் இருப்பதால் ,அவரை புலிக்கால் சித்தர் என்று சொல்வார்கள்.
Post a Comment