திறமையும் ,வீரமும் ,பெண்ணுக்கே உரிய அன்பும் ,பாசமும் ,இரக்கமும் ஒருசேர கொண்ட ஒரு வீரத் தமிழச்சி தான் செம்பியன் மாதேவி.
அவரைப் பற்றியும் அவர் ஆட்சியை சாதனத்தையும் அவரை ஏன் என்று அமெரிக்காவில் உள்ளார் என்பது பற்றி விரிவாக காண்போம்.
இவர் தனது 13வது வயதில் கண்டராதித்த சோழனை மணந்தார்.
தன் கணவரை போலவே இவரும் சிறந்த சிவ பக்தராக விளங்கினார்.
இவர்கள் இருவருக்கும் பிறந்தவர் தான் உத்தமசோழன்.
விதியின் விளையாட்டால் தனது இளமைப் பருவத்திலேயே தன் கணவரை இழந்தார் செம்பியன் மாதேவி.
அதன் பிறகு, இவர் வாழ்வில் கண்ட அரசியல் நெருக்கடிகள் ஏராளம்.
கண்டராதித்தன் இறக்கும் தருவாயில் அவர் மகன் உத்தமசோழன் சிறுவனாக இருந்த காரணத்தினால் செம்பியன் மாதேவி ராஜமாதாவாக இருந்து கண்டராதித்தரின் சகோதரர் அரிஞ்சய சோழரின் அவருக்குப் பின் அவரது மகன் சுந்தர சோழன் அரியணை ஏற்றி அழகு பார்த்தார் செம்பியன் மாதேவி.
அதன் பிறகு தன் மகனான மதுராந்தகன் எனும் உத்தம சோழனை அரசனாக்கினார்.
இப்படி இவர் தம் வாழ்நாளில் எத்தனையோ அரசர்கள் அரியணை ஏறியதை கண்டுள்ளார்.
ராஜராஜசோழனும் அதில் அடக்கம்.
சிவ பணியில் ஆர்வம் கொண்ட செம்பியன் மாதேவி எண்ணிலடங்கா பல கோயில்களைப் புதுப்பித்தார்.
சோழ நாட்டில் கருங்கற்கள் இல்லாத காரணத்தால் பல்லாயிரம் எடை கொண்ட கற்களை பல நூறு மைல்களுக்கு அப்பால் இருந்து வரவழைத்து இடைவிடாமல் சிவ தொண்டு செய்துள்ளார்.
சுந்தர சோழனின் மகனாகிய ராஜராஜ சோழனைக்கும் ஆதித்த கரிகாலனுக்கும் வழிகாட்டியாக இருந்தார் செம்பியன் மாதேவி.
இதன் காரணத்தினாலேயே அவர் உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் எழுப்பினார் என்று ஆய்வாளர்கள் பலர் கூறுகின்றனர்.
சுந்தர சோழனும் அவரது மனைவியும் இறக்கும் சமயத்தில் ராஜராஜசோழன் சிறுவன்.
அந்த சிறுவயது முதல் தன் பாட்டியான செம்பியன் மாதேவி இடம் வளரத் துவங்கினார் ராஜராஜசோழன்.
அரச குலத்துக்கே உரிய அத்தனை நுணுக்கங்களையும் ராஜராஜ சோழனுக்கு சிறுவயது முதலே கற்றுக்கொடுக்க தொடங்கினார் செம்பியன் மாதேவி.
ராஐராஜ சோழன் பேரரசனாக விளங்கியதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது செம்பியன் மாதேவியின் வளர்ப்பு.
செம்பியன் மாதேவி மீது வைத்திருந்த அளவுகடந்த அன்பின் வெளிப்பாடாக அவரது மூத்த மகளுக்குத் தன் பாட்டி இறந்த பெயரான மாதேவடிகள் என்று பெயரிட்டார் ராஜராஜ சோழன்.
செம்பியன் மாதேவி போற்றும் வகையில் ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழன் அவருக்கு கல்லால் ஆன சிலை ஒன்றை வடித்து, அதை அன்னை பார்வதி தேவியாக பாவித்தான்.
அந்த சிலைக்கு இன்றும் நாகப்பட்டினம் அருகே உள்ள கைலாசநாதர் கோவிலில் பூஜைகள் நடைபெறுகின்றன.
அதேபோல செம்பியன் மாதேவியின் மகன் உத்தமசோழன் ஐம்பொன்னால் ஆன செம்பியன் மாதேவி சிலையை கும்பகோணம் அருகே உள்ள கண்டராதித்தர் ஸ்வரம் கோவிலில் விரும்பினால்.
அந்த சிலை கிட்ட தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு முன் அந்த கோவிலில் இருந்து மாயமானது.
தற்போது அமெரிக்காவில் வாஷிங்டன் டிசியில் அருங்காட்சியகம் ஒன்றில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
6 சோழப் பேரரசர்கள் கொண்ட ராஜ மாதாவாக விளங்கியவர் செம்பியன் மாதேவியின்.
இவரின் சிலை அமெரிக்காவில் இருந்து மீட்கப்படுமா?
இல்லை செம்பியன் மாதேவி அமெரிக்காவிலேயே குடி கொள்வாளா?என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இது போன்ற மேலும் பல வரலாற்று சார்ந்த செய்திகளைத் தெரிந்துகொள்ள A2S wisdom website -ஐ சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
Post a Comment